5வது நாளாக 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் 5-வது நாளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக இரண்டாயிரத்து 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 86 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 19 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 719ஆக உயர்ந்துள்ளது.கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் ஆயிரத்து 527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

மேலும் 15 ஆயிரத்து 879 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை,அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Back to top button