தமிழகத்தில் கொரோனா பரவல்… பொது சேவையில் இறங்கிய பிக்பாஸ் ஆரி

நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆம் கட்ட அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளமத்திய – மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. மறுபுறம் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்துள்ளது அர்சு.

இந்நிலையில் நடிகர் ஆரி கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முகக்கவசம் அணியாமல் பைக்கில் வந்தவர்களுக்கு இலவசமாக மாஸ் வழங்கினார், அதேபோல முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடந்து சென்றவர்களுக்கும் மாஸ்க் வழங்கினார்.

தவிர பொதுமக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். முடிந்தவரை பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு நடிகர் ஆரி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Back to top button