ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா…நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகளும் வீடு வீடாக சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு, பாதிப்பு உள்ளவர்களின் தெருக்களை அடைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் பேட்டை அருகேயுள்ள செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.