கொரோனா: நலம் காக்க ‘ஒன்றிணைவோம் வா’ – ஸ்டாலின் வேண்டுகோள்..

மக்கள் நலன்காக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு கொரோனா காலக்கட்டதில் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ‘ஒன்றினைவோம் வா’ என்ற செயல்பாட்டின் மூலம் திமுக துயர் துடைத்தது என கூறியுள்ளார்.

அதேபோல் இந்த கோடை காலத்தில் மக்கள் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்றும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருவதால், மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும் என்றும் அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல் இப்போதும் தொடர வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.