புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி நீக்கம்…மகிழ்ச்சியில் குடிமகன்கள்…

புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரி இன்றுமுதல் நீக்கம் செய்யப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடைகள், மதுபான விடுதிகள், தியேட்டர்கள், மால்கள், வழிபாட்டு தலங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. மே மாதம் முதல் மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்த தொடங்கியது.

அந்த வகையில் புதுச்சேரியில் மே மாதம் 25 ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்க கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. இதனால் மதுபானங்களின் விலை தமிழகத்தில் விற்பனையாகும் விலைக்கு இணையானது.

கிட்டதட்ட 10 மாதங்களாக அமலில் இருந்து வந்த கொரோனா வரி இன்று முதல் நீக்கம் செய்யப்படுகிறது. இதனால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.