கொடைக்கானனில் ரசிக்க ஆள் இல்லாமல் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்கள்.!

 

திண்டுக்கல்  மாவட்டம்  கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் ஆண்டுதோறும் கோடை விழா, மலர் கண்காட்சி விழா ஆகியவை நடைபெறும். தற்போது நோய்த்தொற்றின் காரணமாக இந்த விழாக்கள் அனைத்தும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருவதற்கும் தடை உள்ளது. சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோடை சீசன் காலத்தில் பூக்கள் பூக்கும் வண்ணம் பிரையன்ட் பூங்கா நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதன்படி பிரையண்ட் பூங்காவில் பல லட்சக்கணக்கான வண்ண மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. பல வண்ண ரோஜா மலர்கள், பல்வேறு வகையான மற்ற வகை மலர்களும் தற்போது பூத்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் பூங்கா முழுவதிலும் பூக்கள் பூத்துக் குலுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த வண்ண மலர்களை ரசிப்பதற்கு ஆள் இல்லாமல் உள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button