தமிழ் புத்தாண்டுக்கு தள்ளுபடி அறிவித்த மெட்ரோ நிர்வாகம்… மகிழ்ச்சியில் பயணிகள்

யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும், நாளையும் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று யுகாதி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று நாளை தமிழ் புத்தாண்டு என்பதால், நாளையும் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Back to top button