இரத்தம் சிந்தாமல் அரசாட்சியை மாற்றும் வழிமுறை தான் தேர்தல்… சத்குரு

தமிழகம் முழுவதும் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்று  நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் சத்குரு அவர்கள் வாக்களித்தார்

வாக்களித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சத்குரு அவர்கள் கூறியதாவது.

தேர்தல் என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல, நம் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தன்மை ஆகும்.

ஏனென்றால் அரசாட்சிகள் எந்த கலவரமும், போராட்டமும் இல்லாமல் மாற்றிக் கொள்கின்ற ஒரு முறை தான் தேர்தல்.

மேலும் வாக்குரிமை என்பது ஒரு தனி மனிதனுக்கு தரப்பட்டுள்ள மகத்தான மரியாதை ஆகும். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டும் தான் உள்ளது.

அதனால் இந்த ஜனநாயகத்தில் நாம் அனைவரும் சமம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதை அனைவரும் பொறுப்பாக கடைபிடித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

Back to top button