சென்ற இடமெல்லாம் சிறுமிக்கு வன்கொடுமை… விசாரணையில் அதிர்ந்து போன போலீசார்

நாமக்கலில் 14 வயது‌ சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த 11 பேரை திருச்செங்கோடு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியிலுள்ள தனது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் வீட்டில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில், சகோதரியின் கணவர் சின்ராஜ் சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், தனது நண்பர்களான குமார், வடிவேல், சுந்தரம் ஆகியோருடன் இணைந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கொடுமையை தனது தாயிடம் சிறுமி கூறவே, சிறுமியின் தந்தையின் சிகிச்சைக்கு 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விவகாரத்தை முடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீட்டு நிலையறிந்து வேலைக்கு சென்ற சிறுமியை, அந்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட பன்னீர், மூர்த்தி, கண்ணன், அபி, கோபி, சேகர், சங்கர், சரவணன் ஆகியோர் மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து மீண்டும் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் அளித்தனர்.‌

புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட மகளிர் போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய 12 பேரில் 11 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவான ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Back to top button