தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டம்…

தடுப்பூசி இயக்கத்தை விரைவுப்படுத்தும் விதமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பல்வேறு மாநில முதல்வர்களும் தடுப்பூசிக்கான வயது வரம்பைக் குறைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி யுள்ளனர். இந்திய மருத்துவ சங்கமும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியது. அதில், தொற்றுநோயின் 2-வது அலை வேகமாக பரவுவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசி உத்திகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் என கேட்டிருந்தது.

இந்நிலையில் பணியிடங் களில் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தகுதியான மற்றும் விருப்பமுள்ள ட் செய்யப்படும். ஏற்கனவே உள்ள கொரோனா தடுப்பூசி மையம் இதனை கவனிக்கும். இதுபோன்ற பணியிட தடுப்பூசி மையங்கள் ஏப்ரல் 11 முதல் தொடங்கப்படலாம் என சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.