சாவிலும்இணைபிரியாத இந்து – முஸ்லிம் நண்பர்கள்..!!! நெகிழ்ச்சி சம்பவம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இணைபிரியாத இந்து முஸ்லிம் நண்பர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜுப்லி ரோட்டில் வசித்து வந்தவர் மகாலிங்கம். இவர் வீட்டின் எதிர் தெருவில் வசித்து வந்தவர் ஜெய்னுலாபுதீன். இவர்கள் இரண்டு குடும்பங்களும் இரண்டாவது தலைமுறையாக ஒன்றாகவே இணைந்து நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மகாலிங்கத்திற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் ஜெய்லாபுதீனுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ஜெயிலாபுதீன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

அவருக்கு அருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் மகாலிங்கமும் இறந்துவிட்டார். திரைப்படத்தில் வருவது போல இரு நண்பர்கள், ஒரே நேரத்தில் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.