ஒரு குடிமகனுக்கு இந்த நிலைமையா.. ? வாக்குச்சாவடியில் மதுபிரியரின் அலப்பறை

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார்‌ பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு பொறுப்புள்ள குடிமகன் ஒருவர் வாக்களிக்க வந்தார்.

அனால் அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் அந்த குடிமகனை தடுத்து நிறுத்தி வாக்கு செலுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

என்னது ஒரு குடிமகனுக்கு இந்த நிலைமையா ? என அதிர்ச்சியோடு அங்கிருந்தவர்கள் உன்னிப்பாக கவனித்த போது தான் தெரிந்தது, குடிமகன் மிக்க பொறுப்புடன் புல்லாக மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடியபடி ஜனநாயக கடமையை ஆற்றவந்துள்ளார் என்று..

ஆனால் சும்மா விடுவாரா நமது மதுபிரியர். மதுவை விற்பதே அரசாங்கம் தான் ..குடித்து விட்டு மட்டும் வாக்களிக்க கூடாதா என கேள்வி மேல் கேள்வி கேட்டு அங்கிருந்த போலிசாரை துளைத்து எடுத்தார்.

என்ன சொன்னாலும் வாக்கு செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை துரத்தி அனுப்பினர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குடிமகன் நான் யார் தெரியுமா என லுங்கியைத் தூக்கி கட்டிக்கொண்டு ஆட்களை கூப்பிட்டு வருவதாக அங்கிருந்து வேகமாக சென்றார்

Back to top button