டாட்டா ஏஸ் வாகனத்தில் கடத்தப்பட்ட 150 லிட்டர் சாராயம்.!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனத்தில் 150 லிட்டர் சாராயம் கடத்திய இருவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் அதிகளவில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் புளியங்கோட்டை பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது கல்வராயன் மலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த கொண்டிருந்த டாட்டா ஏஸ் வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அதில் 150 லிட்டர் சாராயம் மற்றும் 200 கிலோ வெல்லம் 100 கிலோ சக்கரை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சாராயம் மற்றும் சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் சாராயத்தை கடத்திய இருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Back to top button