தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் – டிடிவி தினகரன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என கூறினார்.

மேலும் இந்த தேர்தலுடன் தீய சக்தியான திமுகவும், துரோக சக்தியான அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் எனக்கூறிய அவர், தமிழக மக்கள் தங்களது கூட்டணிக்கு ஆதரவளித்து ஆட்சியில் அமர வைப்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Back to top button