தமிழகத்தில் புதிய கட்டுபாடுகள்… மதுக்கடைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கான கட்டுப்பாடுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் 4,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதையடுத்து, புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில்,அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் மதுபான கடைகளுக்கு எந்த விதமான பிரத்யேக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அதிகமாக பரவும் சூழலில், மதுபான கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.