3 மணி நேரம் ஆக்சிஜன் தட்டுப்பாடு…. செங்கல்பட்டில் 11 கொரோனா நோயாளிகள் பலி

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 11 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் புகார் அளித்துள்ளனர்.

Back to top button