ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம் , ரகுமத் நகர், மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவ மழையின் காரணமாக அணைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் இதனை நம்பி விவசாயிகள் சாகுபடி பணிகளை செய்து வந்தனர். தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், விவசாயிகள் இந்த நீரை நம்பி மகிழ்ச்சியுடன் தங்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Back to top button