புதுவையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு.!

 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மனி நேரத்தில் 1819 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுக்க அதிதீவிரமாக பரவி வருகிறது. அதற்கு சிறிய மற்றும் பெரிய மாநிலங்கள் கூட தப்பவில்லை. பிற மாநிலங்களைப் போல கொரோனாவின் தாக்கம் புதுச்சேரியிலும் அதிகரித்து வருகிறது.

புதுவை சுகாதாரத் துறை அறிக்கையின்படி ஒரே நாளில் புதுச்சேரியில் 1435 நபர்களுக்கும், காரைக்காலில் 182 நபர்களுக்கும், ஏனாமில் 180 நபர்களுக்கும், மாஹேவில் 22 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 11717 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 65117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 17 நபர்களும், ஏனாமில் ஒருவர் என 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 883 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை புதுச்சேரியில் மொத்தமாக 65117 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை இல்லாத அளவில் உச்சமாக 1819 நபர்கள் கடந்த 24 மனி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

Back to top button