எது நடந்து விடக் கூடாதுன்னு மக்கள் பயந்தங்களோ… அது நடந்துடுச்சே… மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.

சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-4 மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த உணவகத்தை சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் திமுக தலைவர் ஸ்டாலினின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.

இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. “கோவிட் – 19 ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்” என்ற கருத்துடன் இந்த வீடியோ வைரலானது. இந்தத் வைரல் சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில்… சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! என கூறியுள்ளார்.

அம்மா உணவகத்தில் தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினரை அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் ஸ்டாலின்.

Back to top button