இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போகிறது: சீமான் கவலை

இங்கு சாமிக்கு அரசியல் பேச கட்சி இருக்கிறது. ஆனால் பூமிக்கு பேச கட்சிகள் இல்லை,” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மல்லிகாவை ஆதரித்து பேசினார் அப்போது, இந்தியாவின் முதல் பெண் போராளியான வேலுநாச்சியாரின் வரலாற்றை மறைத்து ஜான்சிராணியை முன்னிறுத்தியுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக நுழைவாயிலில் வேலுநாச்சியார் உருவ சிலையை வைத்து வரவேற்போம் என்றும் மருதுபாண்டியர்களுக்கு இம்மண்ணில் சிலை வைப்போம் என்றும் கூறினார். இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போகிறது என கவலை தெரிவித்த சீமான் இங்கு சாமிக்கு அரசியல் பேச கட்சிகள் உள்ளன. ஆனால் பூமிக்கு அரசியல் பேச கட்சிகள் இல்லை என்றார். அதற்காக தான் தங்களது கட்சியினர் இருக்கிறோம் என்றும் கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டவர்களால் மாற்றம், முன்னேற்றம், ஏற்றம் எதுவும் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது. ஆனால் அடைந்த முன்னேற்றம் என்பது எதுவும் இல்லை என்று சீமான் கூறினார். இயற்கையை தின்று தீர்த்துவிட்டார்கள். அதனை மாற்ற நாங்கள் நினைக்கிறோம், என்றும் பேசினார்.