பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…..வயதான காலத்தில் கம்பி எண்ணும் முதியவர்

புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 66 வயது நபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கீரனுர் எல்லைக்குட்பட்ட விராலிமலை வேலூர் கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி 66 வயது மதிக்கதக்க சேவுகன் என்ற நபர் தனது வீட்டின் அருகில் இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக சிறுமி பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மகளிர் காவல்நிலைய போலீசார் சேவுகனை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சேவுகன் குற்றவாளி என்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார்

Back to top button