தேர்தலுக்கு பின் ஐபேக் நிறுவனம் வழங்கிய ரிப்போர்ட்டை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின் படுகுஷியில் உள்ளாராம்.
தேர்தலுக்கு முன் ஒரு கணிப்பு, தேர்தலுக்கு பின் ஒரு கணிப்பு என்ற ரீதியில் திமுக வட்டாரத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது. தேர்தல் நேரங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாவது வழக்கமான ஒன்று.
இந்த கணிப்புகளில் சில அப்படியே நடந்துள்ளது. சில கருத்துக்கணிப்புகள் பொய்த்தும் உள்ளது. ஆனால் இந்த முறை பல்வேறு ஊடகங்கள் சார்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளை மக்கள் உன்னிப்பாக கவனித்துள்ளனர்.
ஏற்கனவே தேர்தலுக்கு முன் திமுகவிற்கு வேலை பார்க்கும் ஐபேக் நிறுவனம் அளித்திருந்த ரிப்போர்டில், அக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறியிருந்தது. அதே தகவலையே வேறு சில ஊடகங்களும் முன்மொழிந்தன. இது அதிமுக கூட்டணியை அப்செட் செய்தது.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுகவினர் சிலர் பேசிய பேச்சு அவர்களுக்கு எதிராக திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் ஐபேக் நிறுவனத்துக்கு தேர்தலுக்கு பின் மீண்டும் ஒரு கணிப்பு தகவல வழங்கியுள்ளது. அந்த ரிப்போர்ட்டை பார்த்த ஸ்டாலின் தற்போது வெற்றி குஷியில் ஆழ்ந்துள்ளாராம்.
அந்த ரிப்போர்ட் படி, ஏற்கனவே தெரிவித்ததை விட கூடுதாக மேலும் பல இடங்களை திமுக இத்தேர்தலில் கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
இதுவே ஸ்டாலினின் அழவில்லா மகிழ்ச்சிக்கு காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.