பதவியேற்கும் முன்பே மக்கள் பணியில் இறங்கிய ஸ்டாலின்… வியந்து போன அதிகாரிகள்!!

10 வருடத்துக்கு இந்த மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது திமுக. வரும் 7-ம்தேதியே ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடக்குவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில்,“வாழ்த்து தெரிவிப்பதற்காக மு.க.ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முக்கிய உயர் அதிகாரிகளை சிரித்த முகத்தோடு வரவேற்று நலம் விசாரித்திருக்கிறார். தலைமைச் செயலாளர், வாழ்த்து தெரிவித்துவிட்டு, பதவியேற்பு விழாவைப் பற்றி பேசி முடிப்பதற்குள், ‘பதவியேற்பது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். முதலில் மக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து காப்பாத்தணும் சார், அதற்கான நடவடிக்கை எடுப்போம். மாலை வரும்போது ஹெல்த் செகரட்டரியுடன் வாங்க. எந்த டிஸ்டர்பும் இல்லாமல் சிறப்பாக உங்கள் வேலையை தொடருங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

பிறகு மாலை சுகாதாரத்துறை செயலாளருடன் தலைமைச் செயலாளர் சென்ற போது, ஊரடங்கு பற்றியும், மக்களின் பல்வேறு கஷ்டங்களை எடுத்துரைத்துள்ளார் மு.க.ஸ்டாலின். பதவியேற்புக்கு முன்பே மக்கள் பணியை தொடங்கிய ஸ்டாலினை உயரதிகாரிகள் நெகிழ்ந்து பார்க்கின்றனர்.

Back to top button