பணத்திற்காக சிறுமிக்கு நேர்ந்த அவலம்… தாய் பேசும் அதிர்ச்சி ஆடியோ வெளியீடு

சேலத்தில் தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய்க்கு சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் தாய் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னபொண்ணு என்பவர் தனது 10 வயது பேத்தி சேலத்தை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர் சென்னை உள்ளிட்ட சில இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்றதாகவும் புகார் அளித்துள்ளார்.

எனவே அவரை அழைத்து விசாரித்து தனது பேத்தியை மீட்டு தரவேண்டும், என்று கூறினார். இந்நிலையில், சேலம் சைல்டு லைன் அமைப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தது.

இதற்கிடையே அந்த சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில் சிறுமியின் தாய், குழந்தையும், நானும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தொழில் அதிபர் கொடுத்த 10 லட்சம் ரூபாயில் ஒரு வீட்டை கட்டிவிட்டு அங்கு சென்று விடுவேன் என கூறியுள்ளார். இந்த ஆடியோ குறித்து சேலம் டவுன் மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button