கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கொடூர சம்பவம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே யுகாதி பண்டிக்கைக்கு விருந்துக்கு வந்த கர்ப்பிணி மகளை தந்தையே நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கரடிக்கல் கிராமத்தினை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தனது மகள் வெங்கட லட்சுமியை கர்நாடக மாநிலம் மாலுர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு கட்ந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.வெங்கடலட்சுமி தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் யுகாதி பண்டிகை தனது பெற்றோருடன் கொண்டாட வந்துள்ளார்.வெங்கடலட்சுமி தந்தை அருணாச்சலம் குடிபோதையில் தனது மனைவி மாதேவியுடன் கடுமையான சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் தனது வீட்டில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மனைவியை சுட முயன்றுள்ளார்.இதனைக் கண்ட வெங்கட லட்சுமி தனது அம்மாவினை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது வெங்கட லட்சுமியின் நெஞ்சினை துளைத்து சென்றது.இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருணாச்சலம் தங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அருணாச்சலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Back to top button