கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா 6 ஆயிரம்பேரின் பட்டியல் சிக்கியது…

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே செயலி மூலம் அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 6ஆயிரம் பேரின் பட்டியல் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு அதிமுக சார்பில், கூகுள் பே செயலி மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த வாரம் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட தெலுங்கு பாளையத்தில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் சிலர் சிக்கியுள்ளனர். மேலும் கூகுள் பே மூலம் பணப்பட்டுவாடா செய்ய வைத்திருந்த 6,000 பேரின் பெயர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Back to top button