தகுதியானவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும்… ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தல்

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா பரவலுக்கு எதிராக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தகுதியானவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆளுனர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என ஆளுனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.