அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு…

சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மேட்டுபாளையத்தில் நள்ளிரவு இரண்டு மணியளவில் நாகையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து ஒன்று மீன்களை ஏற்றி வந்த லாரியின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 20 பேர் படுகாயமடைந்து கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.