தேர்தல் முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் குத்தி படுகொலை…

ராணிப்பேட்டை அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா சோகனூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜுனன். நேற்று இரவு இவருடைய நண்பர் சூர்யா தனக்கு பிரச்சனை என்றும் அதனால் உடனே குருவராஜப்பேட்டை அருகிலுள்ள கௌதம் நகர் பகுதிக்கு வருமாறும் அர்ஜுனனை போன் செய்து அழைத்ததுள்ளார். இந்நிலையில் தனது மைத்துனர் மதனுடன் அர்ஜுனன் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த 50 க்கும் மேற்ப்பட்ட கும்பல் அர்ஜுனனையும், சூர்யாவையும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் அர்ஜுனன் மற்றும், சூர்யா ஆகிய இருவரும் பலியாகினர். மதன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் தேர்தல் முன் விரோதம் காரணமாக அரக்கோணம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவரது மகன் சத்யா தலைமையில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Back to top button