யோகி வந்தபோது கல்வீசியவர் பாஜகவே கிடையாது… வானதி சீனிவாசன் அதிரடி

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் கோவை வந்த போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளதாக தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று மாலை கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து பேசினார். ஆட்சியரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மரியாதை நிமித்தமாக ஆட்சியரை சந்தித்தேன் என்றும், கொரோனா 2வது அலையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நிலை குறித்து ஆலோசித்தாகவும் தெரிவித்தார்.

மேலும் கொரோனா பாதிப்புகளின் சரி செய்ய ஆக்ஸிஜன் தேவை குறித்து மத்திய அமைச்சரிடம் விரைவில் பேச இருப்பதாகவும் வானதி தெரிவித்தார்.சென்னையில் அம்மா உணவகம் தாக்கப்பட்ட சம்பவம் போன்று பல சம்பவங்கள் திமுகவில் நடந்துள்ளது எனவும் பல முறை நாங்களும் குறிப்பிட்டுள்ளோம் என கூறிய அவர், புதியதாக பொறுப்பேற்கும் தி.மு.க தலைவர்கள் தங்கள் கட்சியினருக்கு தகுந்த அறிவுரை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்த போது ஏற்பட்ட கல்வீச்சு குறித்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து அந்த மர்மநபர்களை போலீசாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறிய வானதி, அந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தெரியாமல் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், வீசியவர் எங்க கட்சிகாரரே இல்லை எனவும் தெரிவித்தார்.

Back to top button