போதையில் கள்ளகாதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கள்ளக்காதலன்..!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய அலெக்ஸ். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன ஒரு இளம்பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் இருவரும் யாருக்கும் தெரியாமல் தொடர்பில் இருந்துள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணிற்கு 5 மற்றும் 3 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இந்த கள்ளக்காதல் விவகாரம் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அலெக்ஸ் மீது அந்த பெண் வைத்திருந்த எல்லையற்ற காதலால், தனது கணவனை விட்டுவிட்டு முதல் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அங்கிருந்து கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா சதுப்பு பகுதியில் இருவரும் குடியேறியுள்ளனர்.அந்த பெண் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், வீட்டிலிருந்த அலெக்ஸ், மது மற்றும் கஞ்சா அடிமையாகியுள்ளான்.

இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் அந்த பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது 5 வயதான மூத்த மகள், உடலில் காயத்துடன் மயங்கி கிடந்துள்ளார். இதனைப்பார்த்து துடித்துப்போன பெண், தனது குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவ பரிசோதனையில், அந்த குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி உடல் முழுவதும் நகக்கீறல்களும், பற்களால் கொடூரமாக கடித்த தடமும் இருந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக, கேரளாவிலுள்ள கும்பளா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது மது மற்றும் கஞ்சா போதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து அலெக்ஸை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.