பைக்கில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்….மாநகராட்சி ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற விவகாரம் தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது சென்னை வேளச்சேரி தொகுதியில், மாநாராட்சி ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து, திமுக கூட்டணி கட்சியினர், மறியலில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்றது தொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், மாநாராட்சி ஊழியர்கள் எடுத்து சென்றது வாக்குப்பதிவு செய்யப்படாத வெற்று இயந்திரம் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. இருப்பினும், அந்த சம்பந்தப்பட்ட 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு வேளச்சேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 12ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.