பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம்..!! தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

பூத் சிலிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களுடன் வாக்களிக்கலாம் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாகக் கூறினார். வெப்கேமரா மூலம், 50 சதவீத வாக்கு சாவடிகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும் என்றும், கொரோனா நோயாளிகள் வாக்களிக்க பிபிஇ கிட் கொடுக்கப்படும் என்றும் சாகு கூறினார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும் பூத் சிலிப் இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்றும் சாகு தெரிவித்தார்.

Back to top button