கிரைம்

காதலி மற்றும் அவரது தாயை எரித்து கொன்று விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்

சென்னை கொருக்குப்பேட்டை அருகே காதலி மற்றும் அவரது தாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு, காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி 2 வது தெருவில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குக்பேட்டை தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது உள்ளே மூன்று பேர் உடல் கருகி  உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட ஆர்.கே நகர் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வீட்டின் உரிமையாளர் வெங்கடம்மாள்(46), அவரது மகள் ரஜிதா, அவரது காதலன் பூபாலன் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. வெங்கடம்மாளின் கணவர் வெங்கடேஷ் தண்டையார்பேட்டை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து வாரிசு அடிப்படையில் அவரது வேலை மகள் ரஜிதாவுக்கு கிடைத்தது.

அதேசமயம் ரஜிதா கடந்த ஏழு வருடங்களாக ராயபுரம் மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் பூபாலன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரஜிதாவிற்கு பணிநிரந்தரம் ஆகவே வெங்கடம்மாள் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த மாதம் அவருடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இதனால் பூபாலன் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கையில் மண்ணெண்ணெய் கேனுடன்  ரஜிதா வீட்டிற்கு சென்று சென்ற பூபாலன், 3 பேர் மீதும் மண்ணெண்ணெய் ஊறிய் கொளுத்தியதாக கூறப்பட்டுகிறது. மேலும்  33 பக்க நோட்டில் நம்பிக்கை துரோகம் செய்து ரஜிதா தன்னை ஏமாற்றியதாக எழுதி வைத்து பூபாலன் இச்செயலை நிகழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொருக்குப்பேட்டை பகுதியில் மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Articles

4 Comments

  1. Commodity smell: light scent. The hair is very good and thick. It will be more natural after washing! Compared with receiving hair, it is cost-effective and convenient!

  2. I know this if off topic but I’m looking into starting my own weblog and was curious what all is required to get setup? I’m assuming having a blog like yours would cost a pretty penny? I’m not very web savvy so I’m not 100 positive. Any recommendations or advice would be greatly appreciated. Kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button