தமிழ்நாடு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ;

7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களை வழங்குவதற்காக, Post metric கல்வி உதவித் தொகை மற்றும் இதர கல்வி உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளார்.

இதை, கடந்த 18ஆம் தேதி அன்று, எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் அறிவித்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதை அறிவித்ததாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்கள் ஆகியவற்றை தமிழக அரசே, நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்குச் செலுத்தும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இதற்காக, தமிழக மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர் என்றும் முதலமைச்சர் பழனிசாமி சாடியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button