தமிழ்நாடு

நியாயமான தேர்தலால் மட்டுமே ஜனநாயகத்தின் எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும் – மு.க.ஸ்டாலின்

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும், பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து இருக்கும் தேஜஸ்வி யாதவ்வுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் ‘கொரோனா’ காலத்தில் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ள சட்டமன்றத் தேர்தல்,  இடைத் தேர்தல்கள்இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிக்கிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் “பீகார் தேர்தலில்  மகாகத்பந்தன்கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும்,  தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட்டால் மட்டுமே ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதிப் படுத்தப்படும்” எனவும் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button