உலகம்

செவ்வாய் கிரகத்தின் சத்தம் எப்படி இருக்கும்? – ஆடியோ + வீடியோவை வெளியிட்டது நாசா ;

செவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் விண்கலம் பதிவு செய்து அனுப்பிய ஆடியோவுடன் கூடிய வீடியோ பதிவு ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் கடந்த 19 ஆம் தேதி தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த ரோவர் செவ்வாய் கிரகத்தை முதல் முறையாக படம் பிடித்து அனுப்பியது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக செவ்வாய்கிரகத்தின் சத்தத்துடன் கூடிய வீடியோ பதிவு ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளது.

இதனை பதிவை நாசா அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மூன்று நிமிடங்கள் 25 வினாடிகள் வரை நீடிக்கும் இந்த ஆடியோ பதிவில் காற்றின் ஒலி, பாராசூட் தரையிறங்குவது, ரோவர் செவ்வாய் கிரகத்தில் கால் பதிப்பது போன்ற காட்சிகள் மிக துல்லியமாக ஆடியோ சத்தத்துடன் உள்ளது.

Related Articles

One Comment

  1. I just like the helpful info you supply to your articles. I’ll bookmark your weblog and test again here regularly. I am quite certain I’ll be informed lots of new stuff proper right here! Best of luck for the following!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button