சசி உள்ளே !!! எடப்பாடி வெளியே !!! அதிமுகவில் அமித்ஷா போடும் அரசியல் கணக்கு ;

தற்போது தமிழக சட்ட பேரவை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், சமுதாய அமைப்புகள் என அனைவரும் தேர்தலுக்கு கடந்த ஆறு மாதமாக தயாராகி வருகின்றனர்.
அதாவது கொரானா தொடங்கியதில் இருந்தே அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய தொடங்கி விட்டனர். இருப்பினும் இரண்டு பெரிய தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதாவின் மறைவால், தேசிய கட்சிகளும் சிறு சிறு கட்சிகளும் தற்போது தமிழ் நாட்டை ஆள சரியான தருணம் என நினைத்து, முதல்வர் கனவோடு தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
இருந்தும் அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கட்சிக்கு சசிகலா தலைமை பொறுப்பேற்றார். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பொறுப்பேற்றார்.அதனை தொடர்ந்து ஓபன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து சசிகலா மீதும் ஆட்சியின் மீதும் உள்ள தனது அதிருப்தியை தெரிவித்தார்.
இதனால் சசிகலா அணி ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.இதை தொடர்ந்து சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரனையில் சசிகலா சிறை சென்றார். அதை தொடர்ந்து அதிமுக விற்கு டி டி வி தினகரன் துணை பொது செயலாளர் எனவும் ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் என்றும் பிரிக்கப்பட்டு ஆட்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் அவர் சார்ந்த எம் எல் ஏக்களோடு நீதி மன்றத்தை நாடினார் தர்மயுத்தம் செய்தார் .இதை தொடர்ந்து டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்க வேண்டும் மேலும் சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஓபிஎஸ் இ பிஎஸ் க்கான பேச்சுவார்த்தையை பிஜேபி முன் நின்று நடத்தியது.அதை தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டு இரண்டு அணிகளும் இணைந்தது .
டிடிவி தனிமை படுத்தப்பட்டார் .அதை தொடர்ந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என்ற குரலோடு டிடிவி அணி என்று உருவானது ,அந்த அணி காலபோக்கில் அமமுக என்று உருவெடுத்தது .
இவ்வளவு இன்னல்களை கடந்த அதிமுக தற்போது பாஜக கூட்டணியோடு வரும் சட்டமனற தேர்தலை சந்திக்கும் என்று உறுதி பட கட்சியின் இரண்டு தலைவர்களும் அறிவித்த நிலையில் பாஜகவினர் அதை ஏற்று கொள்ளவில்லை .தமிழக பாஜக தலைவர் எல் முருகனில் இருந்து குஷ்பூ வரை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? என்று அரசியல் வல்லுனர்கள் கூறும் போது முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி வருவதை பிஜேபி தலைமை விரும்பவில்லை என்றும் சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக நிலைப்பாடு மாறும் எனவும் பிஜேபி தலைமைக்கு தகவல் சென்றதால் பிஜேபி சசிகலா தரப்பிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.
அதே போல் அதிமுக பிஜேபியால் வெளியேற்றபட்ட தினகரனுக்கு டெல்லியில் மவுசு கூடிக்கொண்டு வருவதாவும். இதனாலேயே டி டிவிக்கு தனி விமானம் மூலம் டெல்லி கேட்காமலேயே குக்கர் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று டி டி வியை சந்தோசமழையில் டெல்லி ஆழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேபோல் அதிமுக ஆட்சி என்பது பிப்ரவரியுடன் நிறைவு பெரும் நிலையில் சசியின் வருகை அதிமுகவிற்குள் மிகப்பெரிய பூகம்பத்தை கிளப்பும் என்ற கோணத்திலும் அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சசிகலா டிடிவி இல்லாத அதிமுகவிற்கு வலு இல்லை ஆட்சி முடிந்தவுடன் அதிமுக கட்சியில் இருக்க கூடிய முக்கிய நிர்வாகிகள் பலரும் சசிகலா பக்கம் செல்ல போவதாகவும் பிஜேபியின் தலைமைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்து கொண்ட டெல்லி சசிகலா தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என்ற விருப்பமும் தெரிவித்துள்ளதாம். மேலும் அதிமுகவை டி டி வி தினகரனுடன் இணக்கமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இணைய தளம் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் லட்சுமணன் பேட்டியளித்துள்ளார்.
இதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு விருப்ப மில்லை என்பதையும் ,ஆனால் அதிமுகவில் இருக்கும் பலருக்கும் விருப்பம் இருப்பதையும் உணர்ந்த பிஜேபி தற்போது சசிகலாவையும் அதிமுகவையும் இணைக்கும் வேளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிமுக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கபட்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.எனினும் சசிகலா விடுதலைக்கு பிறகு தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் என்ன என்ன நடக்க போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.