அரசியல்செய்திகள்

விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி? – மகன் விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு

தேர்தல் களத்தில் நண்பனும் இல்லை எதிரியும் இல்லை எனவும் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

தேமுதிக நினைத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில்  மூன்றாவது அணி அமைக்க முடியும் என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் கிளம்பி வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் உடல்நிலை எந்த பிரச்சனையுமின்றி சீராக உள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் அரசியல் களம் மாறும் எனவும் கூறினார். மேலும் தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் எனவும் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மக்களை பார்க்க வேண்டும் என விஜயகாந்த் விரும்புவதால், அனைத்து தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button