கவர் ஸ்டோரி

இந்தியாவில் 66% இடங்களில் பாஜக தோற்றுள்ளது…. பாஜக அலை என்ற ஒன்றே இல்லை… வைரலாகும் தகவல்

இந்தியாவில் உள்ள 29 மாநில சட்டபேரவைகளில் 10-ல் மட்டுமே பாஜகவுக்கு தெளிவான பெரும்பான்மை உள்ளது என்றும் பாஜகவின் அலை அல்லது புயல் இல்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சில இடங்களில் பாஜக கூட்டணி அரசுகள் செயல் படுகின்றன. அங்கும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே அதன்படி பாஜகவுக்கு கூட்டணி அரசாங்கம் உள்ள மாநிலங்களில், பாஜகவின் இருக்கை நிலை குறைவாகவே காணப்படுகிறது

மேகாலயாவில் 60 இடங்களில் 2-ல் மட்டுமே பாஜக வென்றுள்ளது. பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் பாஜக 53 இடங்கை மட்டுமே பிடித்துள்ளது .இதே போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 87 இடங்களில் 25 மட்டுமே பாஜக தேர்வான இடங்கள் ஆகும். இதே போன்று கோவாவில் 40 இடங்களில் 13 மட்டுமை பாஜக வெற்றி பெற்ற இடங்கள் ஆகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பிற மாநிலங்களில் பாஜகவின் நிலை என்னவென்று பார்த்தால், சிக்கிம் மற்றும் மிசோரமில் பாஜகவுக்கு இடங்கள் கிடையாது. அதேபோல் தமிழ்நாட்டிலும் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான இடங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆந்திராவில் 175 இடங்களில் 4-ல்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கேரளாவில் 140இடங்களில் 1 இடம் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளது.பஞ்சாபில் 117 தொகுதிகளில் 3 மட்டுமே பாஜகவுக்கு சொந்தமானது. மேற்கு வங்காளத்தில் 294 இடங்களில் 3 இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளது

இதே போன்று தெலுங்கானாவில் 119 இடங்களில் 5 தொகுதிகளும் டெல்லியில் 70 இடங்களில் 8 தொகுதிகளும்ஒடிசாவில் 147 இடங்களில் 10 தொகுதிகளும் நாகாலாந்தில் 60 இடங்களில் 12 -ல் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது.

நாட்டின் உள்ள மொத்தம் 4139 சட்டசபை இடங்களில், பாஜகவுக்கு 1516 இடங்கள் உள்ளன, அதில் 950 இடங்கள் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., எம்.பி., ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களைச் சேர்ந்தவை ஆகும்.

இதனால் பாஜகவின் அலை அல்லது புயல் இல்லை, உண்மையில், நாட்டின் 66 விழுக்காடு இடங்களில் பாஜக தோற்றுள்ளது என்பதே உண்மை நிலவரம் ஆகும் என்ற புள்ளி விபரங்கள் தற்போது இணையங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button