ரஜினி மூலம் திமுக, அதிமுகவை அழிக்க சதி – பாஜகவை தாக்கிய அமைச்சர் சிவி சண்முகம்!
அதிமுக அமைச்சரின் கருத்து பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், ரஜினி காந்த் மூலம், திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கடைபிடித்து வரும், சமூக நீதிக் கொள்கையை, அழிக்க சிலர் சதி செய்வதாக, பாஜகவை மறைமுகமாக தாக்கிப் பேசினார். திமுக, அதிமுக வை அழிக்க, அவர்களுக்கு ஒரு பிரபல்யமான முகம் தேவைப்படுவதாகவும், அதற்காக ரஜினிகாந்தை பயன்படுத்த உள்ளனர் எனத் தெரிவித்தார்.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, சமூக நீதியை காத்து, ஏழை, எளிய ஆதி திராவிட மக்களுக்காக உழைத்து வருவதாகவும், அதை ஒழிக்கவே ரஜினிகாந்த் களமிறக்கப்பட்டுள்ளார் என சிவி சண்முகம் சாடியுள்ளார். ரஜினியை பாஜகவின் பி டீம் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வரும் நிலையில், அதிமுக அமைச்சரும் அதே போன்ற கருத்தை தெரிவித்துள்ளது, பாஜக மற்றும் ரஜினி ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமைச்சர் சிவி சண்முகத்தின் இந்த கருத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
I have been surfing on-line greater than 3 hours nowadays, but I never discovered any attention-grabbing article like yours. It’s beautiful price sufficient for me. Personally, if all web owners and bloggers made excellent content material as you did, the web can be a lot more useful than ever before.