அரசியல்சென்னைதமிழ்நாடு

தொல்.திருமாவளவன் மீது நடிகை குஷ்பு பாய்ச்சல் – திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்;

மதத்தின் பெயரால் பெண்களை இழிவாகப் பேசியதாக திருமாவளவன் மீது பாஜகவின் குஷ்பு புகார் கூறியுள்ளார்

சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் குஷ்பு விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவில் அவர் பேசிய விதம் மிக கண்டிக்கதக்கது ,பெண்களை கேவலமாக இழிவாக பேசியுள்ளார், இது மத பிரச்சனை அல்ல ஒரு பெண்ணை பற்றி பேசும் போது இப்படி பேசலாமா? அதுவும் ஒரு கட்சி தலைவராக இருந்து கொண்டு பேசலாமா? நிச்சயமாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர் பேசும் போது அவர்களது கூட்டணி கட்சியிலுள்ள திமுக, காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்கவில்லை, திமுக , காங்கிரஸ் இதற்கு என்ன பதில் கூற போகிறார்கள்.

பெண் கட்சி தாவினால் கேவலம் என்று சொல்லும் காங்கிரஸ் தலைவர் பெண்ணை இழிவாக பேசும் போது அமைதியாக இருக்கலாமா? மனு தர்மத்தில் உள்ளதை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார் திருமாவளவன்.என்று கூறினார்.

 

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button