கவர் ஸ்டோரி

பெட்ரோல் – டீசல் விலை உயர காரணம் இதுதான் – மத்திய அமைச்சர் விளக்கம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதே, பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வரும் நிலையில், கடந்த இரண்டு வார காலமாக பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 92 ரூபாய் 90 காசுகளாக உள்ளது.

டீசல் விலை 86 ரூபாய் 31 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயைத் தொட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள போதும் கூட, மத்திய – மாநில அரசுகளின் வரி விதிப்பால் தான், எரிபொருள் விலை உயர்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வதாகவும் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு, உலகளாவிய விநியோகம் குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாகவும், தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Related Articles

4 Comments

  1. I simply needed to thank you very much again. I am not sure the things I would have made to happen in the absence of these creative concepts revealed by you about such a situation. It had been the intimidating dilemma for me personally, however , taking note of a specialized style you processed that made me to cry with fulfillment. I will be thankful for this work and then wish you recognize what an amazing job that you’re accomplishing teaching others using your webpage. I am certain you’ve never encountered all of us.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button