மருத்துவம்

உடல் சூட்டால் அவதிப்படுகிறீர்களா? … அதனை தடுக்க எளிய தீர்வுகள் இதோ…

இதனால் பாதிக்கப்படுபவர்கள் இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்....

வெயில் காலமோ, மழை காலமோ திடீரென ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் உடலில் சூடு பிடித்து விடும். அதுமட்டுமின்றி நாம் உண்ணும் உணவுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன. சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறே நமது உடல் உறுப்புகளிலும் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனை எளிய முறையில் நாம் தீர்க்கலாம்.

உடலின் வெப்பம் அதிகரிப்பதால் வயிற்று வலி, மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க இயற்கையான உணவுகள் பல உள்ளன. இதனால் மயக்க உணர்வு, நாக்கு, கண்கள் வறண்டு போவது ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

வீடியோவாக காண: https://www.youtube.com/watch?v=NJq7s8a9hbk

இதனை தடுக்க தினமும் குறைந்தது 5 லிட்டர் அளவிற்கு நீராவது நாம் அருந்த வேண்டும். காரணம் உடலின் நீர்ச்சத்து குறையும் போது தான் நாம் உடல் சூட்டை உணர்வோம். தண்ணீர் தான் உடல் வெப்பத்தை போக்கும் சிறந்த தீர்வாகும். அதேபோல் ஆப்ரிகாட் பழங்கள் ஜூஸில் தேன் கலந்து குடித்தால் வெப்பம் குறையும்.

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், காய்கறிகள், தினமும் 1 டம்ளர் குளிர்ந்த பால், வாழைப்பழம், கரும்பு ஜூஸ், வெள்ளரிக்காய், இளநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களும் உடல் சூட்டை தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் உடல் சூடு பிரச்சனைகள் இருப்பவர்கள் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

 

Related Articles

21 Comments

  1. of course like your web-site but you need to check the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very troublesome to inform the truth then again I’ll definitely come again again.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button