இந்தியாசுற்றுலா - ரயில்கள்வைரல்

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்… என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…!

ரயில்வேயின் இந்த நடவடிக்கை பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில்  அதிரடி மாற்றம் செய்துள்ளது. இந்த புதிய முறை இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு நாடு முழுவதும் படிப்படியாக ரயில்களின் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க முன்பதிவு செய்த மக்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் இந்த முன்பதிவு வசதியில் மிகப்பெரிய மாற்றத்தை ரயில்வே துறை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ரயில் புறப்படும் 4 மணி நேரங்களுக்கு முன் ரிசர்வேஷன் சார்ட் எனப்படும் டிக்கெட்டின் நிலை அல்லது அதுகுறித்த தகவல்கள் குறுந்தகவலாக அனுப்பப்பட்டு வந்தது. அதன்பின் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டு 1 மணி நேரம் முன்பு வரை ரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கெட் பெறும் நிலையும் இருந்தது.

மேலும் ரிசர்வேஷன் சார்ட் தயாரிக்கப்பட்டப் பின் பயணத்தை ரத்து செய்பவர்களால் டிக்கெட் பணத்தை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக அவசர தேவை உள்ளவர்கள் டிக்கெட்டுகள் காலியாக இருந்தாலும் முன்பதிவு செய்ய முடியாத நிலைமையும் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு  இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இனி ரயில் புறப்படும் 5 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது ரிசர்வேஷன் சார்ட் 4 மணி நேரத்திற்கும், 2வது ரிசர்வேஷன் சார்ட் 5 நிமிடங்களுக்கு முன்பும் அனுப்பப்படும். இடைப்பட்ட நேரத்தில் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் ரத்து செய்பவர்களும் செய்யலாம்.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button