உலகம்

என்ன யாரும் தடுக்க முடியாது… சொந்தமாக சமூக வலைத்தளம் தொடங்கும் ட்ரம்ப்….

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிதாக சமூக வலைத்தளம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத விரக்தியில் தனது ஆதரவாளர்களை ஏவி வெள்ளை மாளிகையில் கலவரத்தை தூண்டினார் ட்ரம்ப். இதனால் ஆதரவாளர்கள் – போலீசார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலியாயினர்.

இதற்கு காரணமான ட்ரம்பிற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவரின் கருத்துகள் வன்முறையை தூண்டுவதாக கூறி பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்நாப்சேட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை உபயோகிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இதில் ட்விட்டர் நிறுவனம், அவரது கணக்கை நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தது. இதற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் அவர் சொந்தமாக சமூக வலைத்தளம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button