கிருஷ்ணகிரிதமிழ்நாடு

வனவிலங்குகளை மின்சார வேலி அமைத்து வேட்டையாடிய இருவர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வனவிலங்குகளை மின்சார வேலி அமைத்து வேட்டையாடியவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் பகுதியில் கடந்த வாரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து விளைநிலங்களில் மின்சார வேலி அமைத்த வெங்கடேசப்பா என்பவரை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளி நாராயணப் பாவை தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூர் அருகே பதுங்கியிருந்த நாராயணப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button