தமிழ்நாடுநாகப்பட்டினம்

பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக கைது;

பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது என உதயநிதி குற்றசாட்டு.

நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.

அப்போது அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து இன்று 2வது நாளாக நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கரைப்பேட்டை மின்பிடி துறைமுகத்தில் மீனவர்களுடன் படகில் சென்று ஆதரவு திரட்டினார்.

இந்நிலையில், தடையை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறி, உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தங்களது பிரச்சாரத்தை ஒடுக்கவே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button