2 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்… அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!!

டெல்லியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் பரவல் கோரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் அலையை விட கொரோனாவின் 2வது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள், கொரோனா விதிமுறைகள், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்தியாவின் தலைநகர்  டெல்லியில் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  இதையடுத்து அம்மாநில அரசு  ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் இதனால் 72 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் இயல்பு வாழ்கைப் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Back to top button