ஆண்கள் கிரிக்கெட் அணி செய்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்த பெண்கள் அணி…

ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ந்து 22 போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய ஆண்கள் அணி 21 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே ஒருநாள் போட்டிகளில் ஒரு அணி தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்த சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி அந்த சாதனையை முறியடித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங், தொடர்ந்து நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் அனுபவும் இளமையும் எங்களுக்கு கை கொடுத்துள்ளதாக கூறினார். நாங்கள் கிரிக்கெட்டை ஆக்ரோஷத்துடன் விளையாடவே விரும்புகிறோம். இந்த வெற்றி நடை தொடரும் என ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்து இந்த சாதனையை எட்டியுள்ளது ஆஸ்திரேலியா மகளிர் அணி.